தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ சர்வீஸ் சாலையில் தேங்கும் மழைநீர்

சர்வீஸ் சாலையில் தேங்கும் மழைநீர்

சர்வீஸ் சாலையில் தேங்கும் மழைநீர்


ADDED : அக் 02, 2026 05:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 02, 2026 05:05 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கரூர்:கரூர்- - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், செம்மடை உயர்மட்ட மேம்பாலத்தின் கீழ் உள்ள சர்வீஸ் சாலையில், போதிய வடிகால் வசதி இல்லாததால் மழைநீர் தேங்கி நிற்கிறது.

கரூர்- - சேலம் தேசிய நெடுஞ்சாலை செம்மடை உயர்மட்ட மேம்பாலம் வழியாக, நாள்தோறும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள், கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. அதே வேளையில், உள்ளூர் மக்கள், விவசாயிகள், வணிக நிறுவனங்களுக்கு செல்வோர் பாலத்தின் கீழ் உள்ள சர்வீஸ் சாலையையே பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த சாலையில் முறையான மழைநீர் வடிகால் வசதி செய்யப்படவில்லை. இதன் காரணமாக, மழை காலங்களில், பாலத்திலிருந்து வழியும் மழைநீரும், சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து வரும் நீரும் வெளியேற வழியின்றி, சர்வீஸ் சாலையில் தேங்கி நிற்கிறது. இந்த நீரால் அப்பகுதியே குளம் போல காட்சியளிக்கிறது. தேங்கி நிற்கும் மழை நீரால் துர்நாற்றம் வீசுவதோடு, கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா போன்ற தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மழைக்காலம் தீவிரமடைவதற்கு முன்பாக, செம்மடை உயர்மட்ட பாலத்தின் சர்வீஸ் சாலையில் வடிகால் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us