/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மலையாண்டிப்பட்டியில் ரேக்ளா போட்டி
/
மலையாண்டிப்பட்டியில் ரேக்ளா போட்டி
ADDED : ஜன 29, 2024 12:39 PM
குளித்தலை: பொங்கல் பண்டிகையையொட்டி, குளித்தலை அடுத்த பாப்பக்காப்பட்டி பஞ்., மலையாண்டிப்பட்டியில், லயன்கிங் பிரதர்ஸ் இளைஞரணி மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில், 26ம் ஆண்டு மாபெரும் எல்லை பந்தைய போட்டி, நேற்று காலை நடந்தது.
இதில், மாடுகளுக்கான சிறிய மாடு, ஒத்தை மாடு, இரட்டை மாடு, குதிரைகளுக்கான புதிய குதிரை, பெரிய குதிரை, சைக்கிள் ரேஸ், 1,500 மீ., பந்தயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்
பட்டன.
எல்லை பந்தய போட்டியில், தஞ்சாவூர், ஈரோடு, நாமக்கல், திருச்சி, கரூர் மாவட்டத்தை சேர்ந்த காளைகள், குதிரைகள் எல்லைக்கோட்டில் இருந்து சீறிப்பாய்ந்தன.
ஒத்த மாட்டிற்கு, 6 மைல், இரட்டை மாட்டிற்கு, 8 மைல் தொலைவும், சிறிய குதிரைக்கு, 8 மைல் தொலைவும், பெரிய குதிரைக்கு, 10 மைல் தொலைவும் துாரம் நிர்ணயிக்கப்பட்டது.
இதில், வெற்றி பெற்ற குதிரை, காளைகளின் உரிமையாளர்களுக்கு விழாக்குழு சார்பில் பரிசு தொகை வழங்கப்பட்டது.