ADDED : மார் 28, 2026 05:00 AM
கரூர்; கரூர், ராம் நகர் பக்த அபய கோதண்ட ராமர் கோவிலில், ராமநவமி மஹோத்சவ விழா நேற்று நடந்தது.
நேற்று காலை, 6:00 மணிக்கு ஆரத்தியுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து சிறப்பு யாகம், மூலவர் சிலைக்கு காவிரி தீர்த்தத்தால் சங்கு அபி ேஷகம் மற்றும் விஷ்ணு சகஸ்ராம அர்ச்சனை நடந்தது. மஹா தீபாராதனைக்கு பிறகு பக்தர்க-ளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.அதேபோல், சணப்பிரட்டி கோதண்ட ராமர் கோவிலில், ராம நவமியையொட்டி, சிறப்பு அபிேஷகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.
ஆஞ்சநேயர் கோவிலில்
லாலாப்பேட்டை, ராம ஆஞ்சநேயருர் கோவிலில், ராம நவமி மஹோத்ஸவ சிறப்பு வழிபாடு நடந்தது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த லாலாப்பேட்டை கொடிக்கால் தெருவில், ராம ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு, 46ம் ஆண்டு ராம நவமி மஹோத்ஸவ சிறப்பு வழிபாடு பூஜை நடந்தது.
ேற்று காலை 10:30 மணிக்கு ராம ஆஞ்சநேய-ருக்கு அபி ேஷகம் செய்யப்பட்டது. தொடர்ந்து ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் காட்சிய-ளித்தார்.
ஏராளமானோர் கலந்து கொண்டனர். பக்தர்க-ளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
