/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ராம்ராஜ் காட்டன் வேட்டி வாரத்தை முன்னிட்டு சர்ட்டுடன் வேட்டி காம்போ பேக் அறிமுகம்

ADDED : ஜன 02, 2025 07:34 AM
ஈரோடு: ராம்ராஜ் காட்டன் நிறுவனம், ஜன.,1 முதல் 6 வரை ராம்ராஜ் வேட்டி வாரமாக கொண்டாடி வருகிறது.
இந்தாண்டு வேட்டி வாரத்துடன் கூடிய தமிழர் திருநாளில், ராம்ராஜ் விற்பனையில் முதலிடத்தில் இருக்கும் கல்சர் கிளப் கலர் சர்ட் மற்றும் வேட்டியுடன் அனைவரும் வாங்கும் வாய்ப்-பிற்காக, 695 ரூபாய் சில்லறை விற்பனை விலைக்கு, 10க்கும் மேற்பட்ட வண்ணங்களில் வழங்குகிறது. ஜன., 1 முதல் 7 வரை கொண்டாடவுள்ள வேட்டி வாரம் நிகழ்ச்சியில், அனைவரும் உடுத்தி மகிழ கலர் சர்ட், வேட்டி இணைந்து வழங்கப்படுகிறது. கல்ச்சர் கிளப் காம்போ பேக் ரகங்கள், தமிழகத்தில் உள்ள முன்-னணி ஜவுளி நிறுவனங்களிலும் மற்றும் ராம்ராஜ் கம்பெனி ஷோரும்களிலும் கையிருப்பு உள்ள வரை விற்பனையில் இருக்கும். கிராமப்புற நெசவாளர்களின் வாழ்க்கையை மேம்பட செய்து, காந்தி கண்ட கனவை நனவாக்கிட, அனைத்து தரப்பி-னரும் உபயோகிக்கும் வகையில், கடந்த 9 ஆண்டுகளாக வேட்டி வாரம் நிகழ்ச்சிக்கு புதுப்புது ரகங்களை அறிமுகப்படுத்தி வருவ-தாக, ராம்ராஜ் நிறுவனர் நாகராஜன் கூறினார்.
விழாவில், ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் நாகராஜன், நிர்வாக இயக்குனர் அருண் ஈஸ்வர், தலைமை செயல் நிர்வாகிகள் செல்வகுமார், கணபதி ஆகியோர் கல்ச்சர் கிளப் கலர் சர்ட், வேட்டியை றிமுகம் செய்து வைத்தனர். இந்த சலுகைகள் தமிழ்நாட்டிற்கு மட்டுமே பொருந்தும் என, நிறுவனர் நாகராஜன் அறிவித்தார்.