ADDED : அக் 04, 2025 01:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்,இரும்பூதிப்பட்டி, ரங்க நாதர் கோவில் கும்பாபி ேஷக விழா நடந்தது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த சிவாயம் பஞ்சாயத்து இரும்பூதிப்பட்டி யில் ரங்கநாதர் கோவில் உள்ளது. கும்பாபி ேஷக விழாவை முன்னிட்டு கோவில் புதுப்பிக்கப்பட்டது. தொடர்ந்து ஆற்றில் இருந்து புனித காவிரி நீர் எடுத்து வரப்பட்டது.
நேற்று காலை சிறப்பு யாக வேள்வி பூஜைகள் செய்து கோவிலில் ரங்கநாதர் சுவாமிக்கு கும்பாபி ேஷகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு வழிபாடு பூஜை நடந்தது.
இரும்பூதிப்பட்டி சுற்று வட்டார பகுதி மக்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.