'2 முதல் 4 வரை வீடுகளுக்கு சென்று ரேஷன் வினியோகம்'
'2 முதல் 4 வரை வீடுகளுக்கு சென்று ரேஷன் வினியோகம்'
ADDED : மே 31, 2026 02:48 AM
கரூர்:முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், ஜூன் 2 முதல் 4 வரை வீடுகளுக்கு சென்று முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என, கலெக்டர் முத்துக்குமரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் வயதான முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் கரூர் மாவட்டத்தில், 769 ரேஷன் கடைகளை சேர்ந்த, 33,280 குடும்ப அட்டைதாரர்களுக்கு, அவர்களின் இல்லங்களுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு மாதமும், வாகனங்களில் குடிமை பொருட்களை எடுத்து சென்று, ரேஷன் கடை ஊழியர்கள் வினியோகம் செய்து வருகின்றனர். இந்நிலையில் வரும் ஜூன் 2, 3, 4 ஆகிய தேதிகளில், முதியோர், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று. ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
