ADDED : ஆக 02, 2026 07:09 AM
அ நிறம் | அளவு
கரூர்:வரும்
4 முதல் 6ம் தேதி வரை, முதியோர் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்கள்
வழங்கப்படும் என, கலெக்டர் முத்துக்குமரன் தெரிவித்துள்ளார்.
இது
குறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பொது வினியோக திட்டத்தின் கீழ் வயது முதிர்ந்தோர், மாற்றுத்திறனாளி
ரேஷன் அட்டைதார்களின் இல்லத்திற்கு சென்று அரிசி, சர்க்கரை
உள்ளிட்ட பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதன்படி, 770
ரேஷன் கடைகளை சேர்ந்த, 33,803 ரேஷன் அட்டைதாரர்களின்
இல்லங்களுக்கே சென்று, ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. வரும் 4
முதல், 6ம் தேதி வரை வீடுகளுக்கு நேரடியாக சென்று ரேஷன் பொருட்கள்
வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
