தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ வீடு தேடி ரேஷன் பொருள்

வீடு தேடி ரேஷன் பொருள்

வீடு தேடி ரேஷன் பொருள்


ADDED : பிப் 01, 2026 08:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 01, 2026 08:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்: நாளை முதல் மாற்றுத்திறனாளி, முதியவர்களின் வீடுகளுக்கு சென்று, ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்படும் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை யில் கூறியிருப்பதாவது:

முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், வயது முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் கரூர் மாவட்டத்தில், 732 ரேஷன் கடைகளை சேர்ந்த, 32,154 ரேஷன் அட்டைதாரர்களுக்கு, அவர்களின் இல்லங்களுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு மாதமும், வாகனங்களில் பொருட்களை எடுத்து சென்று, ரேஷன் கடை ஊழியர்கள் வினியோகம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நாளை, நாளை மறுநாள் ( பிப்., 2, 3)ஆகிய நாட்களில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று, பொருட்களை வினியோகம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, பயனாளர்கள் மேற்கண்ட தேதிகளில், ரேஷன் பொருட்களை பெற்று கொள்ளலாம்.இவ்வாறு கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us