ADDED : ஜன 08, 2026 07:02 AM

அரவக்குறிச்சி: க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட நடந்-தையில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், ரேஷன் கட்டடம் திறப்பு விழா நடந்தது.
அரவக்குறிச்சி தி.மு.க.,- எம்.எல்.ஏ., இளங்கோ ரேஷன் கடையை திறந்து வைத்தார். அரவக்கு-றிச்சி தொகுதிக்கு மட்டும் மூன்று முழு நேர கடைகளும், 40 பகுதி நேர கடைகளும் துவக்கப்-பட்டுள்ளது. 10 இடங்களில் ரேஷன் கடைகளுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. தென்னி-லையில், திருச்சிராப்பள்ளி மத்திய கூட்டுறவு வங்கி கிளை தொடங்கப்படவுள்ளது என, அதிகா-ரிகள் தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் க.பரமத்தி தி.மு.க., தெற்கு ஒன்-றிய செயலாளர் கருணாநிதி மற்றும் ஒன்றிய நிர்-வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.புதிய ரேஷன்கடை திறக்கப்பட்டதன் மூலம், அத்-தியாவசிய பொருட்களை எளிதாக பெறும் வசதி ஏற்பட்டுள்ளது என, பொதுமக்கள் மகிழ்ச்சி தெரி-வித்தனர்.

