/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பி.ஓ.எஸ்., மிஷினுடன் தராசு இணைப்பை கைவிட ரேஷன் கடை தொழிலாளர் முன்னேற்ற சங்கம் மனு
/
பி.ஓ.எஸ்., மிஷினுடன் தராசு இணைப்பை கைவிட ரேஷன் கடை தொழிலாளர் முன்னேற்ற சங்கம் மனு
பி.ஓ.எஸ்., மிஷினுடன் தராசு இணைப்பை கைவிட ரேஷன் கடை தொழிலாளர் முன்னேற்ற சங்கம் மனு
பி.ஓ.எஸ்., மிஷினுடன் தராசு இணைப்பை கைவிட ரேஷன் கடை தொழிலாளர் முன்னேற்ற சங்கம் மனு
ADDED : ஜூன் 01, 2025 01:44 AM
கரூர், ரேஷன் கடைகளில் எடைபோடும் தராசை, பி.ஓ.எஸ்., மிஷினுடன் புளூடூத் வாயிலாக இணைத்து, பில் போடும் நடைமுறையை கைவிட வேண்டும் என, ரேஷன் கடை தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் சரவணன் தலைமையில், கரூர் எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜியிடம் மனு அளித்தனர்.
அதில், கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டத்தில், ரேஷன் கடையில் எடை போடும் எலக்ட்ரானிக் தராசை, பில் போடும் பி.ஓ.எஸ்., மிஷினுடன் புளூடூத் வாயிலாக இணைத்து, பில் போடும் நடைமுறை அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த முறையில் பில் போடுவதால், ஒரு ரேஷன் கார்டுக்கு பொருட்கள் வினியோகம் செய்ய, 15 நிமிடம் வரை நேரமாகிறது. ஒரு நாளைக்கு, 30 அல்லது 45 பேருக்கு மட்டும் தான் பில் போடப்பட்டு பொருள்கள் வழங்க முடியும். ஏற்கனவே, சர்வர் பிரச்னை இருக்கும் நிலையில், இந்த முறையால் மேலும் சிக்கலாகிறது. பில் போட காலதாமதம் காரணமாக ரேஷன் கடை பணியாளர்களுக்கும், நுகர்வோருக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது.
பல கடைகளில் ஒருவரே பணியில் இருப்பதால், பில் போட்டு விட்டு, எடை போடும் போது மேலும் தாமதம் ஏற்படும். பி.ஓ.எஸ்., மிஷினுடன் தராசு இணைப்பதை தவிர்க்க வேண்டும். ரேஷன் கடைகளில் எடையாளர் பணி நியமனம் செய்யும் வரை, கூட்டுறவு சங்கங்களின் மூலமாக, தற்காலிகமாக தினசரி ஊதியத்தில் பணி நியமனம் செய்ய வேண்டும். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தால் நடத்தப்படும், ரேஷன் கடைகளுக்கு மட்டும் வழங்கப்படும் பொருட்களுக்கு சேதாரம், கழிவு போன்றவை, அனைத்து கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்படும் கடைகளுக்கும் வழங்க வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.