/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நாளை முதல் முதியோர் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருள் வழங்கல்
/
நாளை முதல் முதியோர் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருள் வழங்கல்
நாளை முதல் முதியோர் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருள் வழங்கல்
நாளை முதல் முதியோர் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருள் வழங்கல்
ADDED : நவ 02, 2025 12:54 AM
கரூர், நாளை முதல் முதியோர், மாற்றுத்திறனாளி அட்டைதாரர்கள் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்.
முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் முதியோர், மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கரூர் மாவட்டத்தில், 730 ரேஷன் கடைகளை சேர்ந்த, 33,677 குடும்ப அட்டைதாரர்களின் இல்லங்களுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.நவம்பரில் நாளை முதல், 5ம் தேதி வரை முதியோர், மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று, ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்படும். இத்தகவலை கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.