/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தீபாவளியை முன்னிட்டுவரும் 5, 6ல் ரேஷன் சப்ளை
/
தீபாவளியை முன்னிட்டுவரும் 5, 6ல் ரேஷன் சப்ளை
ADDED : அக் 01, 2025 02:13 AM
கரூர்; தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்., 5, 6 ஆகிய நாட்களில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று, ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்படும் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.
அவர், வெளியிட்ட அறிக்கை:
கரூர் மாவட்டத்தில், வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை வினியோகம் செய்யும் முதல்வரின் தாயுமானவர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் கரூர் மாவட்டத்தில், 730 ரேஷன் கடைகளை சேர்ந்த, 28,694 ரேஷன் அட்டைதாரர்களுக்கு இல்லங்களுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், வாகனங்களில் குடிமைப்பொருட்களை எடுத்து சென்று, ரேஷன் கடை ஊழியர்கள் வினியோகம் செய்து வருகின்றனர். இந்நிலையில், தீபாவளி பண்டிகை வருவதை முன்னிட்டு அக்., 5, 6 ஆகிய நாட்களில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று, ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்படும். இவ்வாறு, அதில், கூறப்பட்டுள்ளது.