/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சிவப்பு சோளப்பயிர்கள் அறுவடை பணி விறுவிறு
/
சிவப்பு சோளப்பயிர்கள் அறுவடை பணி விறுவிறு
ADDED : ஜூலை 20, 2025 05:27 AM
கிருஷ்ணராயபுரம்: கட்டளை, ரெங்கநாதபுரம் பஞ்.,ல் சாகுபடி செய்யப்பட்டுள்ள சிவப்பு சோளப்பயிர்கள் அறுவடை பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த கட்டளை, ரெங்கநாதபுரம், மேலமா-யனுார், கீழ மாயனுார் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகள், விளை நிலங்களில் சிவப்பு சோளப்பயிர்கள் சாகுபடி செய்திருந்-தனர்.
மேலும், பயிர்களுக்கு போர்வெல் நீரை பயன்படுத்தியும், அம-ராவதி பாசன வாய்க்கால் நீரையும் கொண்டு தண்ணீர் பாய்ச்சப்-பட்டு வந்தது.
தற்போது, சோளப்பயிர்கள் பசுமையாக வளர்ந்து, சோளம் நல்ல விளைச்சல் கண்டுள்ளது. தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் இருந்ததால், விவசாய கூலி தொழிலாளர்களை கொண்டு அறுவடை பணி துவங்கப்பட்டுள்ளது.
அறுவடை செய்யப்பட்ட சோளப்பயிர்கள், சேலம், நாமக்கல் பகுதிகளுக்கு கொண்டுசென்று விற்பனை தீவிரமாக நடந்துவருகி-றது.