/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
டிராக்டர் டிப்பரில் செம்மண் கடத்தல்
/
டிராக்டர் டிப்பரில் செம்மண் கடத்தல்
ADDED : ஜூன் 19, 2025 01:49 AM
குளித்தலை, செம்மண் கடத்திய வாகனத்தை வருவாய் துறையினர் பறிமுதல் செய்தனர்.
குளித்தலை அடுத்த, வடசேரி பஞ்., காரணாம்பட்டி சாலையில், நேற்று மாலை வி.ஏ.ஓ., சதீஷ் மற்றும் உதவியாளர் செல்வராணி ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த டிராக்டர் டிப்பரை நிறுத்தி, சோதனை செய்த போது அரசு அனுமதியில்லாமல் அரை யூனிட் செம்மண் கடத்தியது தெரியவந்தது. வாகன உரிமையாளர், டிரைவர் இருவரும் தப்பி சென்றனர்.
செம்மண் கடத்திய டிராக்டர் டிப்பரை பறிமுதல் செய்து, தோகைமலை போலீசில் வி.ஏ.ஒ., சதீஷ் ஒப்படைத்தார். இது தொடர்பாக காவல்காரன்பட்டி தினேஷ்குமார், டிரைவர் ராசு ஆகிய இருவர் மீது எஸ்.ஐ., பாலசுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.