/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அமராவதி அணையில் இருந்து ஆற்றில் தண்ணீர் திறப்பு குறைப்பு
/
அமராவதி அணையில் இருந்து ஆற்றில் தண்ணீர் திறப்பு குறைப்பு
அமராவதி அணையில் இருந்து ஆற்றில் தண்ணீர் திறப்பு குறைப்பு
அமராவதி அணையில் இருந்து ஆற்றில் தண்ணீர் திறப்பு குறைப்பு
ADDED : மார் 17, 2025 04:17 AM
கரூர்: திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணையில் இருந்து ஆற்றில் திறக்கப்பட்ட, 150 கன அடி தண்ணீர், வினாடிக்கு, 130 கன அடியாக குறைக்கப்பட்டது.
புதிய பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்-ளது. 90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 51.28 அடி-யாக இருந்தது. அமராவதி அணைக்கு, நேற்று காலை வினாடிக்கு, 11 கன அடி தண்ணீர் வந்தது.கரூர் அருகே, மாயனுார் கதவ-ணைக்கு நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 1,085 கன அடியாக தண்ணீர் வரத்து இருந்தது. அந்த தண்ணீர் முழுவதும் காவிரியாற்றில் குடிநீர் தேவைக்காக, திறக்கப்பட்டது. நான்கு பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து நின்றது. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 10.43 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.