/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
காட்டுவாரி வாய்க்காலில் நாணல் செடிகளால் பாதிப்பு
/
காட்டுவாரி வாய்க்காலில் நாணல் செடிகளால் பாதிப்பு
ADDED : அக் 04, 2025 01:05 AM
கிருஷ்ணராயபுரம் கோவக்குளம் காட்டுவாரி பாசன வாய்க்காலில், நாணல் செடிகள் அதிகம் வளர்ந்து வருவதால் தண்ணீர் வருவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனுார் காவிரி ஆற்றில் இருந்து, கிருஷ்ணராயபுரம் வாய்க்கால் வழியாக கோவக்குளம் வரை காட்டு வாரி பாசன வாய்க்கால் செல்கிறது. இதில் வரும் தண்ணீரை கொண்டு கோவக்குளம், பிச்சம்பட்டி, மேட்டு மகாதானபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு பாசன நீர் கிடைக்கிறது. இதன் மூலம் விவசாயிகள் நெல், வாழை, வெற்றிலை, சோளம் ஆகிய பயிர்களை சாகுபடி செய்கின்றனர்.
தற்போது காட்டு வாரி பாசன வாய்க்காலில், அதிகமான நாணல் செடிகள் வளர்ந்து வருவதால் பாசனத்திற்கு தண்ணீர் செல்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, வாய்க்காலில் வளர்ந்து வரும் நாணல் செடிகளை அகற்ற, நீர்வளத்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாசன வாய்க்கால் மூலம், 100 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.