ADDED : செப் 29, 2026 05:48 AM
கரூர்; 'கரூர், தான்தோன்றிமலையில் உள்ள மாநக-ராட்சி, 3வது மண்டல அலுவலகம் அருகில் நிழற்கூடம் அமைக்க வேண்டும்' என, வி.சி.க., தொழிற்சங்க பேரவையின் மாநில செயலர் சுடர்-வளவன் தலைமையில், கரூர் கலெக்டர் அலுவ-லக குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: கரூர் மாநக-ராட்சிக்குட்பட்ட தான்தோன்றிமலை, 3வது மண்-டல அலுவலகம் அருகே பஸ் ஸ்டாப் உள்ளது. இந்த பஸ் ஸ்டாப்பில் இருந்து, தினமும் ஏராள-மான பொதுமக்கள், பள்ளி, கல்லுாரி மாண-வர்கள், கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில் வருகை தரும் பக்தர்கள் என பலரும் சென்று வருகின்றனர்.அங்கு, நிழற்கூடம் இல்லாத காரணத்தால் வெயில் மற்றும் மழைக்காலங்களில் பயணிகள் சாலையோரங்களில் நின்று நீண்ட நேரம் காத்தி-ருக்கும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். பொது-மக்கள் பயன்பெறும் வகையில், மண்டல அலுவ-லகம் அருகே உள்ள காலி இடத்தில் உடனடியாக பயணிகள் நிழற்கூடம் அமைத்து தர உரிய நடவ-டிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்-டுள்ளது.
