/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்
/
பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்
பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்
பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்
ADDED : பிப் 28, 2024 07:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் : கரூர் மாவட்ட இடை நிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் சங்கம் சார்பில், மாநில செயற்குழு உறுப்பினர் தலைமையில், வட்டார போக்குவரத்து அலுவலகம் முன் நேற்று காத்திருப்பு போராட்டம் நடந்தது.
அதில், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்களுக்கு சமவேலை-சம ஊதியம் வழங்க வேண்டும். கடந்த, 2021 ல் நடந்த சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க., அளித்த வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்தும், கோஷங்கள் எழுப்பப்பட்டன.போராட்டத்தில், மாவட்ட செயலாளர் நாகராஜ், பொருளாளர் பிரபு உள்பட, 100 க்கும் மேற்பட்ட இடை நிலை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.