/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
இளம்பெண் சாவில் மர்மம் உறவினர்கள் சாலை மறியல்
/
இளம்பெண் சாவில் மர்மம் உறவினர்கள் சாலை மறியல்
ADDED : ஜூன் 15, 2025 01:26 AM
கரூர்:கரூர் அருகே இளம்பெண் சாவில் மர்மம் உள்ளதாக கூறி, உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
கரூர் மாவட்டம், காதப்பாறை வெண்ணைமலையை சேர்ந்தவர் முருகராஜ், 30; கூலி தொழிலாளி. இவரது மனைவி காவியா, 26. இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் குடும்ப பிரச்னை காரணமாக, காவியா அவரது வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவரது உடலை, வெங்கமேடு போலீசார் கைப்பற்றி, கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, நேற்று மதியம், காவியா உறவினர்கள், அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி, காந்திகிராமத்தில் உள்ள திருச்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த, கரூர் டவுன் டி.எஸ்.பி., செல்வராஜ், இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் பேச்சு நடத்தினர்.
இதையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர். இதனால், கரூர் - திருச்சி சாலையில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.