/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குவாரியில் விழுந்து உயிரிழந்த மாணவர் உடலை பெற்று கொண்ட உறவினர்கள்
/
குவாரியில் விழுந்து உயிரிழந்த மாணவர் உடலை பெற்று கொண்ட உறவினர்கள்
குவாரியில் விழுந்து உயிரிழந்த மாணவர் உடலை பெற்று கொண்ட உறவினர்கள்
குவாரியில் விழுந்து உயிரிழந்த மாணவர் உடலை பெற்று கொண்ட உறவினர்கள்
ADDED : அக் 06, 2024 03:00 AM
கரூர்: கரூர் அருகே, கல் குவாரியில் விழுந்து உயிரிழந்த பள்ளி மாணவன் உடலை, உறவினர்கள் நேற்று பெற்றுக் கொண்டனர்.
கரூர் மாவட்டம், புன்னம் ஆலம்பாளையம் காலனி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் குமார், 42; இவரது மகன் ராகுல், 14, கரூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த, 3ல் ராகுல் அதே பகுதியில் உள்ள, கைவிடப்-பட்ட கல் குவாரியில் தேங்கியிருந்த தண்ணீரில் விழுந்து உயிரி-ழந்தான். போலீசார் ராகுல் உடலை கைப்பற்றி, கரூர் அரசு மருத்-துவ கல்லுாரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்-தனர். நேற்று முன்தினம், கல் குவாரியை மூடாத உரிமையாளர், கனிம வளத்துறை, வருவாய் துறை அதிகாரிகள் மீது, நடவ-டிக்கை எடுக்க கோரி, ராகுல் உடலை வாங்க மறுத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்நிலையில், நேற்று மதியம் கரூர் டவுன் டி.எஸ்.பி., செல்-வராஜ், வெங்கமேடு இன்ஸ்பெக்டர் செந்துார் பாண்டியன் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், அரசு சார்பில் சட்டரீதியான உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, ராகுலின் உற-வினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, நேற்று மதியம் ராகுலின் உடலை, உறவினர்கள் பெற்றுக் கொண்டனர். இதனால், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் கடந்த, இரண்டு நாட்களாக நீடித்த காத்திருப்பு போராட்டம் முடி-வுக்கு வந்தது.