/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆசிரியரின் சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல் போராட்டம்
/
ஆசிரியரின் சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல் போராட்டம்
ஆசிரியரின் சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல் போராட்டம்
ஆசிரியரின் சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல் போராட்டம்
ADDED : மே 17, 2025 01:33 AM
குளித்தலை :குளித்தலை அடுத்த, மகாதானபுரம் பஞ்., தீர்த்தம்பாளையத்தை சேர்ந்தவர் ரவி மனைவி சரஸ்வதி, 55. இவர், நேற்று முன்தினம் மாலை தனது வீட்டின் முன் சுத்தம் செய்த போது, அருகில் இருந்த தனியார் டவர் வேலியின் இரும்பு கம்பியை தொட்டபோது, எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து பலியானார்.
நேற்று பெண்ணின் உறவினர்கள், தனியார் மொபைல்போன் டவர் அதிகாரிகள் அலட்சியமாக நடந்து கொண்டதால்தான், ஆசிரியர் மின்சாரம் பாய்ந்து பலியானார்.
எனவே, தனியார் டவர் அதிகாரிகளை கண்டித்தும், பலியான குடும்பத்திற்கு இழப்பீடு கேட்டும், குளித்தலை அரசு
மருத்துவமனை மற்றும்
மகாதானபுரம் நெடுஞ்சாலையில் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு, பிரேதத்தை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குளித்தலை டி.எஸ்.பி., செந்தில்குமார் தலைமையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி
யதையடுத்து, உறவினர்கள் சாலை மறியலை கைவிட்டு, உடலை பெற்றுக்கொண்டனர். இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.