/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சிறுமியை கண்டுபிடித்து தரக்கோரி உறவினர்கள் மறியல் போராட்டம்
/
சிறுமியை கண்டுபிடித்து தரக்கோரி உறவினர்கள் மறியல் போராட்டம்
சிறுமியை கண்டுபிடித்து தரக்கோரி உறவினர்கள் மறியல் போராட்டம்
சிறுமியை கண்டுபிடித்து தரக்கோரி உறவினர்கள் மறியல் போராட்டம்
ADDED : ஆக 01, 2024 07:27 AM
குளித்தலை: காணாமல் போன சிறுமியை கண்டுபிடித்து தரக்கோரி, குடும்பத்-தினர் உறவினர்களுடன் மறியல் போராட்டம் நடத்தினர்.
குளித்தலை அடுத்த, கடவூர் யூனியன் சேவாப்பூர் கோட்டக்-கரை பகுதியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவருடைய 17 வயது மகள், 10ம் வகுப்பு வரை படித்துவிட்டு, வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த, 25 காலை முதல் மகளை காண-வில்லை. பாலவிடுதி போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை, வெள்ளைச்சாமி, இவரது மனைவி சாவித்திரி மற்றும் உறவினர்கள் பாலவிடுதி போலீஸ் ஸ்டேஷ-னுக்கு வந்தனர். ஒரு வாரமாகியும் இதுவரை மகளை கண்டுபி-டிக்கவில்லையே என்று கேட்டனர். போலீசார் சரிவர பதில் தரா-ததால், ஆவேசமடைந்த உறவினர்கள் தரகம்பட்டி--மணப்பாறை நெடுஞ்சாலையில், கடவூர் பிரிவு ரோட்டில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாலவிடுதி எஸ்.ஐ., மனோகரன் உள்பட போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் தனியாக ஒரு போலீசாரை நியமனம் செய்து, கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதைய-டுத்து அவர்கள் மறியலை விலக்கி கொண்டனர்.