/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நெரிசலில் சிக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு நிவாரணம்
/
நெரிசலில் சிக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு நிவாரணம்
நெரிசலில் சிக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு நிவாரணம்
நெரிசலில் சிக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு நிவாரணம்
ADDED : அக் 01, 2025 01:46 AM
கரூர், கரூர் வேலுச்சாமிபுரத்தில், த.வெ.க., பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 110 பேர் காயமடைந்தனர். இதுவரை, 41 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் உயிரிழந்தவர்களின், 18 பேரின் குடும்பத்தினருக்கு தலா, 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்பட்டது. தொடர்ந்து, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் காயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வரும், 5 பேருக்கு தலா, 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, கரூர் எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி வழங்கினார்.
உயிரிழந்த கரூர் ரத்தினம்சாலை சுமதி, 50, காமராஜபுரம் ஆகாஷ், 23, வேலுச்
சாமிபுரம் பழனியம்மாள், 11, கோகிலா, 14, சுகுணா, 65, எல்.என்.எஸ். கிராமத்தை சேர்ந்த ரவிகிருஷ்ணன், 32, ஆகியோர் வீடுகளுக்கு நேரில் சென்று, குடும்பத்தினரிடம் தலா, 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
மேலும் உயிரிழந்த கரூர் பாரதி நகரை சேர்ந்த கவின், 31, பிச்சம்பட்டி விஜயராணி, 42, அரவக்குறிச்சி குமராண்டான்வலசு பிருந்தா, 21, தொக்குபட்டி அஜிதா, 20, வேலாயுதம்பாளையம் ஜெயந்தி, 45, ஆகியோரின் வீடுகளுக்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு தலா, 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அரவக்குறிச்சி தி.மு.க., எம்.எல்.ஏ., இளங்கோ, கிருஷ்ணராயபுரம் தி.மு.க., எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரிஆகியோர் வழங்கினர். அப்போது, துணை மேயர் தாரணி சரவணன், மண்டல தலைவர்கள் கனகராஜ், ராஜா உடனிருந்தனர்.