/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நெரிசலில் காயமடைந்தவருக்கு நிவாரண நிதி கிடைக்கவில்லை: கலெக்டரிடம் மனு
/
நெரிசலில் காயமடைந்தவருக்கு நிவாரண நிதி கிடைக்கவில்லை: கலெக்டரிடம் மனு
நெரிசலில் காயமடைந்தவருக்கு நிவாரண நிதி கிடைக்கவில்லை: கலெக்டரிடம் மனு
நெரிசலில் காயமடைந்தவருக்கு நிவாரண நிதி கிடைக்கவில்லை: கலெக்டரிடம் மனு
ADDED : அக் 28, 2025 01:26 AM
கரூர், நெரிசல் விபத்தில் காயமடைந்தவருக்கு நிவாரண நிதி கிடைக்கவில்லை என, கரூரை சேர்ந்த பர்கத் நிஷா மனு அளித்துள்ளார்.
கரூர் சின்ன ஆண்டாங்கோவில் ரெட்டிபாளையத்தை சேர்ந்த பர்கத் நிஷா, 37, என்பவர், கரூர், வேலுச்சாமிபுரத்தில் த.வெ.க., தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தார். இவருக்கு, நிவாரண தொகை வரவில்லை என, நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தார்.
அதில், கூறியிருப்பதாவது: கடந்த, 27ல் நடந்த த.வெ.க., தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில், நெரிசலில் சிக்கி காயமடைந்தேன். தொடர்ந்து கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், மூன்று நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிகிச்சையின்போது, தேசிய ஜனநாயக கூட்டணி உண்மை கண்டறியும் ஆய்வுக்குழு தலைவர் ஹேமமாலினி, பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, கரூர் எம்.பி.., ஜோதிமணி ஆகியோர் எனக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
இந்நிலையில், தமிழக அரசு சார்பில் படுகாயமடைந்தவர்களுக்கு தலா, 1 லட்சம் ரூபாய், சிறிய காயமடைந்தவர்களுக்கு, 50 ஆயிரம் ரூபாய், மத்திய அரசு சார்பில் காயமடைந்தவர்களுக்கு, 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிவாரண நிதி தொடர்பாக, மருத்துவமனை மற்றும் வீட்டில் வந்து விபரங்களை அதிகாரிகள் பெற்று சென்றனர். இதுவரை, எனக்கு நிவாரணம் நிதி வழங்கப்படவில்லை. மாவட்டம் நிர்வாகத்தினர், நிவாரண நிதி வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

