/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரூ.55.16 லட்சம் மதிப்பு நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு
/
ரூ.55.16 லட்சம் மதிப்பு நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு
ரூ.55.16 லட்சம் மதிப்பு நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு
ரூ.55.16 லட்சம் மதிப்பு நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு
ADDED : டிச 06, 2024 07:28 AM
கரூர்: கரூரில் இருந்து, பெஞ்சல் புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு, 55.16 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து, பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு, நிவாரண பொருட்களை வாகனங்களில் அனுப்பும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் தங்கவேல் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இங்கிருந்து புயல் பாதித்த விழுப்புரம், கடலுார் மாவட்ட மக்களுக்கு பல்வேறு சங்கங்கள் மற்றும் ஊரக வளர்ச்சித்தறை பொதுநிதி மூலம் துவரம் பருப்பு, அரிசி, சர்க்கரை, எண்ணெய், உப்பு உள்பட மளிகை பொருட்கள் கொண்ட, 3,000 பைகள், 9,800 பெட்சீட்கள், 500 பாய்கள், 3,000 நாப்கின்கள், 98 குடிநீர் பாட்டில்கள் கொண்ட பெட்டிகள், 85 பிஸ்கட் பெட்டிகள், 770 பால் பவுடர் பாக்கெட்டுகள் என மொத்தம், 55.16 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள், ஆறு வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
* கரூர் மாவட்ட காங்., அலுவலகத்தில் இருந்து, புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்களை வாகனங்களில் அனுப்பும் நிகழ்ச்சி நடந்தது. மாநகராட்சி கவுன்சிலரும், காங்., மாநில பொதுக்குழு உறுப்பினருமான ஸ்டீபன் பாபு தொடங்கி வைத்தார். விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்ட மக்களுக்கு, 1.50 லட்சம் ரூபாய் செலவில் பருப்பு, அரிசி, பெட்சீட்கள், துண்டுகள் ஆகியவை அனுப்பி வைக்கப்பட்டது. நகர துணைத் தலைவர்கள் குமார், கண்ணப்பன், காந்தி, சாந்தோஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.