/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
விளம்பர பலகை, சுவரொட்டிகள் அகற்றம்
/
விளம்பர பலகை, சுவரொட்டிகள் அகற்றம்
ADDED : மார் 17, 2024 02:41 PM
கரூர்: தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், கரூர் நகரில் வைக்கப்பட்டிருந்த பல்வேறு கட்சிகளின் விளம்பர போர்டுகள், சுவரொட்டிகளை மாநகராட்சி பணியாளர்கள் நேற்று அகற்றினர்.
லோக்சபா தேர்தல் ஏப்., 19ல் நடைபெறும் என, இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
இதை தொடர்ந்து கரூர் நகரில் உள்ள அனைத்து கட்சி விளம்பர பலகைகள், பிளக்ஸ் பேனர்கள் அகற்றப்பட்டு வருகின்றன. பஸ் ஸ்டாண்ட், சர்ச் கார்னர், லைட்ஹவுஸ் பகுதிகளில் வைக்கப்பட்ட அனைத்து விளம்பர பலகைகள், சுவரொட்டிகள் அகற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல், மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சியினரின் சுவரொட்டிகள், விளம்பர பலகைகள் அகற்றும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

