/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரவக்குறிச்சி அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்
/
அரவக்குறிச்சி அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ADDED : ஆக 01, 2025 01:24 AM
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி அருகே வேலம்பாடி கிராமத்தில், 20 ஆண்டுகளாக நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்திருந்த, 10க்கும் மேற்பட்ட கடைகள் இடித்து தள்ளப்பட்டன.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே வேலம்பாடி பகுதியில் இருந்து, பழனி செல்லும் சாலையில், 20 ஆண்டுகளாக நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து கடைகள் கட்டப்பட்டுள்ளதாக பொதுமக்கள் சார்பில், தொடர் புகார்கள் சென்றன. இது தொடர்பாக, அண்மையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டது.இதையடுத்து வேலம்பாடி மற்றும் அண்ணா நகர் பகுதியில், நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து
கட்டப்பட்டிருந்த, 10-க்கும் மேற்பட்ட கடைகளை அரவக்குறிச்சி தாசில்தார் மகேந்திரன் தலைமையிலான வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரம் கொண்டு இடித்து
அகற்றினர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.