/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தனியார் கல்லுாரி வளாகத்தில்மலை தேனீக்கள் அகற்றம்
/
தனியார் கல்லுாரி வளாகத்தில்மலை தேனீக்கள் அகற்றம்
ADDED : ஏப் 17, 2025 01:59 AM
கரூர்:க.பரமத்தி அருகே, தனியார் கல்லுாரி வளாகத்தில், மலை தேனீக்கள் அகற்றப்பட்டது.க.பரமத்தி அருகே, காருடையாம்பாளையம் பகுதியில் தனியார் பொறியியல் கல்லுாரி செயல்படுகிறது. கல்லுாரி வளாகத்தில் உள்ள, ஒரு மரம் மற்றும் கட்டடத்தில் மலை தேனீக்கள் கூடு கட்டியிருந்தது.
சில நேரங்களில், கூட்டில் இருந்து வெளியேறும் மலை தேனீக்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவியரை தீண்ட தொடங்கியது. இதனால், மலை தேனீக்களை அகற்றுமாறு, கல்லுாரியை சேர்ந்த ராம் என்பவர், வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலையத்தில் புகார் செய்தார்.இதையடுத்து, தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான, தீயணைப்பு வீரர்கள் கல்லுாரி வளாகத்தில் கூடு கட்டியிருந்த இருந்த, மலை தேனீக்களை தண்ணீரை பீய்ச்சி அடித்து அகற்றினர்.