/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வீட்டின் மாடியில் இருந்த மலை தேனீக்கள் அகற்றம்
/
வீட்டின் மாடியில் இருந்த மலை தேனீக்கள் அகற்றம்
ADDED : ஏப் 08, 2024 07:32 AM
கரூர் : வேலாயுதம்பாளையம் அருகே, வீட்டின் மேல் மாடியில் இருந்த மலை தேனீக்கள் அகற்றப்பட்டன.கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே, கந்தம்பாளையம் மலை நகர் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கவாசகர், 50.
இவரது வீட்டின் மேல் மாடியில், மலை தேனீக்கள் கூடு கட்டியிருந்தன. சில நேரங்களில், கூட்டில் இருந்து வெளியேறும் மலை தேனீக்கள், அக்கம் பக்கம் உள்ளவர்களை தீண்ட தொடங்கியது. இதனால், மலை தேனீக்களை அகற்றுமாறு, வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலையத்தில், மாணிக்கவாசகம் புகார் செய்தார். அதன்படி, தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், மாணிக்கவாசகத்தின் வீட்டின் மேல் மாடியில் இருந்த மலை தேனீக்களை, நேற்று அகற்றினர்.

