/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நங்காஞ்சி ஆற்று பாலத்தில் கருவேல மரங்கள் அகற்றம்
/
நங்காஞ்சி ஆற்று பாலத்தில் கருவேல மரங்கள் அகற்றம்
ADDED : ஆக 28, 2024 07:41 AM
அரவக்குறிச்சி: நீண்ட நாட்களாக பராமரிப்பு பணிகள் செய்யப்படாமல் இருந்த, நங்காஞ்சி ஆற்று பாலத்தில் இருந்த கருவேல மரங்களை அகற்றி, பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன.
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் உள்ள பாலங்களை, முறையாக பராமரித்து தடையின்றி தண்ணீர் செல்ல நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் அடிப்படையில் அரவக்குறிச்சி நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் உள்ள, புங்கம்பாடி வளைவு பகுதியில் அமைந்துள்ள நங்காஞ்சி ஆற்று பாலத்தில், நீண்ட நாட்களாக கருவேல மரங்கள் சூழ்ந்து புதர் போல் காட்சி அளித்தது.
இந்நிலையில் இந்த பாலத்தை சுத்தப்படுத்தி, பராமரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வருகிறது. மரங்கள் சூழ்ந்து இருந்ததால், ஆற்று பாலம் வழியாக தண்ணீர் செல்ல முடியாமல் ஆங்காங்கே தடுப்புகள் போல் சூழ்ந்து இருந்தது. இதனால் நங்கஞ்சி ஆற்று கரையோர விவசாயிகள், தண்ணீர் இன்றி எந்த வித பயிர்களும் பயிரிடாமல் இருந்தனர். நீண்ட நாட்களாக, பராமரிப்பு பணிகள் செய்யப்படாமல் இருந்த அரவக்குறிச்சி நங்காஞ்சி ஆற்று பாலத்தில், தற்போது பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

