/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நெடுஞ்சாலையில் முள் செடிகள் அகற்றம்
/
நெடுஞ்சாலையில் முள் செடிகள் அகற்றம்
ADDED : நவ 07, 2025 12:35 AM
குளித்தலை குளித்தலை அடுத்த வதியம் பஞ்., குறப்பாளையத்தில் இருந்து மணத்தட்டை, சுங்கவாயில், பெரியபாலம், தண்ணீர்பள்ளி, மருதுார் டவுன் பஞ்., வீரம்பூர் வரை உள்ள சாலையை, மாநில நெடுஞ்சாலை பராமரித்து வருகிறது.
பெரியபாலத்தில் இருந்து மருதுார் பிரிவு தேசிய நெடுஞ்சாலை வரை, சாலையின் இரு புறங்களிலும் கடந்த மாதம் பெய்த மழையால் செடிகள் மற்றும் முள்செடிகள் வளர்ந்து போக்குவரத்திற்கு இடையூறாக இருந்து வந்தது.
இதையடுத்து, குளித்தலை நெடுஞ்சாலைத்துறை சாலை ஆய்வாளர் சேகர் மேற்பார்வையில், சாலை பணியாளர்கள் முள் செடிகளை அகற்றினர். மழையால் சாலையோரங்களில் ஏற்பட்ட மண் அரிப்பை சரி செய்யும் வகையில், பொக்லைன் இயந்திரம் மூலம் மண் அரிப்பு
சரி செய்யும் பணி நடந்தது.

