/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரயில்வே ஸ்டேஷனில் இரு தகவல் பலகை அகற்றம்: பயணிகள் அவதி
/
ரயில்வே ஸ்டேஷனில் இரு தகவல் பலகை அகற்றம்: பயணிகள் அவதி
ரயில்வே ஸ்டேஷனில் இரு தகவல் பலகை அகற்றம்: பயணிகள் அவதி
ரயில்வே ஸ்டேஷனில் இரு தகவல் பலகை அகற்றம்: பயணிகள் அவதி
ADDED : ஏப் 27, 2024 09:52 AM
கரூர்: கரூர் ரயில்வே ஸ்டேஷனில், வைக்கப்பட்டிருந்த இரண்டு தகவல் பலகைகளும் திடீரென அகற்றப்பட்டுள்ளது. இதனால், ரயில்கள் குறித்த தகவல்களை அறிந்து கொள்ள முடியாமல் பயணிகள் திணறுகின்றனர்.
தென் மாவட்டங்களின் நுழைவு வாயிலாக உள்ள, கரூர் வழியாக நாள்தோறும், 47 ரயில்கள் செல்கிறது. ஆயிரக்கணக்கான பயணிகள் கரூர் வந்து செல்கின்றனர். இதனால், ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில், இரண்டு இடங்களில் டிஜிட்டல் தகவல் வைக்கப்பட்டிருந்தது.அதன் மூலம், ரயில்கள் வரும் நேரம், புறப்படும் நேரம், ரயில்கள் நிற்கும் பிளாட்பாரம் குறித்த, தகவல்களை பயணிகள் தெரிந்து கொண்டனர். இந்நிலையில், திடீரென இரண்டு டிஜிட்டல் தகவல் பலகைகளும் அகற்றப்பட்டுள்ளது.
இதனால், கரூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்லும் பயணிகள் ரயில்கள் வருகை, புறப்பாடு குறித்த தகவல்களை அறிந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அகற்றப்பட்ட டிஜிட்டல் தகவல் பலகைகளை உடனடியாக, கரூர் ரயில்வே ஸ்டேஷனில் மீண்டும் வைக்க, ரயில்வே துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணிகள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

