/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கலெக்டர் அலுவலகத்தில் குடியரசு தின விழா
/
கலெக்டர் அலுவலகத்தில் குடியரசு தின விழா
ADDED : ஜன 27, 2024 04:30 AM
கரூர்: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நாட்டின், 75வது குடியரசு தின விழா நேற்று காலை நடந்தது. மாவட்ட கலெக்டர் தங்கவேல் தேசிய கொடியை ஏற்றி வைத்து, போலீசார் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில், பல்வேறு துறைகளின் சார்பில், 41 பயனாளிகளுக்கு, ஒரு கோடியே, 47 லட்சத்து, 40 ஆயிரத்து, 378 ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். சிறப்பாக பணி யாற்றிய, போலீசாருக்கும் பதக்கம் வழங்கப்பட்டது.
பிரபாகர், டி.ஆர்.ஓ.,க்கள் கண்ணன், கவிதா (நிலம் எடுப்பு), திட்ட இயக்குனர் ஸ்ரீ லேகா, ஆர்.டி.ஓ., க்கள் இளங்கோ, ரவி உள்ளிட்ட, அரசு துறை அதிகாரிகள் பலர், குடியரசு தின விழாவில் பங்கேற்றனர். முன்னதாக, பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற, கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
* கரூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், குடியரசு தின விழா நடந்தது. அதில், மாவட்ட நீதிபதி சண்முக சுந்தரம், தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
தலைமை குற்றவியல் நீதிபதி ராஜலிங்கம், நீதிபதிகள் அம்பிகா, நித்யா, வக்கீல்கள் சங்க செயலாளர் தமிழ்வாணன்,, அரசு வக்கீல் குடியரசு உள்பட பலர் பங் கேற்றனர்.
* கரூர் மாவட்ட மைய நூலகத்தில், குடியரசு தின விழா நடந்தது. அதில், மாவட்ட நூலக அலுவலர் சிவக்குமார், தேசிய கொடியை ஏற்றி வைத்தார். விழாவில், துாய்மை பணியாளர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

