/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாவட்ட பள்ளி, கல்லூரிகளில் குடியரசு தினம் கொண்டாட்டம்
/
மாவட்ட பள்ளி, கல்லூரிகளில் குடியரசு தினம் கொண்டாட்டம்
மாவட்ட பள்ளி, கல்லூரிகளில் குடியரசு தினம் கொண்டாட்டம்
மாவட்ட பள்ளி, கல்லூரிகளில் குடியரசு தினம் கொண்டாட்டம்
ADDED : ஜன 27, 2024 04:34 AM
நாமக்கல்: நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரியில், 75வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. முதல்வர் ராஜா தலைமை வகித்து, தேசிய கொடியை ஏற்றி வைத்து, இனிப்பு வழங்கினார். தமிழ் துறை தலைவர் கந்தசாமி, பொருளியல் துறை தலைவர் குமரவேல், உடற்கல்வி இயக்குனர் கார்த்தி, துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்
பங்கேற்றனர்.
* எலச்சிப்பாளையம் ஒன்றியம், மேட்டுப்புதுார் பஞ்., துவக்கப்பள்ளியில் நடந்த விழாவுக்கு, கூத்தம்பூண்டி பஞ்., தலைவர் அழகேசன் தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் பழனியப்பன், தேசிய கொடியேற்றினார்.
ராமஜெயம் மெடிக்கல் உரிமையாளர் செந்தில்குமார், பள்ளி மாணவ, மாணவியருக்கு திருக்குறள் புத்தகம் வழங்கினார். ஆசிரியர்கள், மாணவ, மாணவியர், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.
* நாமக்கல் நகர காங்., சார்பில் நடந்த விழாவுக்கு, கிழக்கு மாவட்ட தலைவர் சித்திக் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட தலைவர் வீரப்பன், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு தலைவர் பொன்முடி, நகர இளைஞர் காங்., தலைவர் ரகுவரன், நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

