sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூர் மாவட்டத்தில் குடியரசு தின விழா கோலா-கலம்

/

கரூர் மாவட்டத்தில் குடியரசு தின விழா கோலா-கலம்

கரூர் மாவட்டத்தில் குடியரசு தின விழா கோலா-கலம்

கரூர் மாவட்டத்தில் குடியரசு தின விழா கோலா-கலம்


ADDED : ஜன 27, 2026 05:38 AM

Google News

ADDED : ஜன 27, 2026 05:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்ட, அரசு விளையாட்டு மைதா-னத்தில் நாட்டின், 77 வது குடியரசு தின விழா நேற்று கொண்டாடப்பட்டது.

மாவட்ட கலெக்டர் தங்கவேல் தேசிய கொடியை ஏற்றி வைத்து, போலீசாரின் அணிவகுப்பு மரியா-தையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில், பல்வேறு துறைகளின் சார்பில், 34 பயனாளிகளுக்கு, 54 லட்சத்து, 4,970 ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும் சிறப்பாக பணியாற்றிய, 39 போலீசா-ருக்கு முதல்வர் காவலர் பதக்கம் வழங்கப்பட்-டது. பிறகு, கரூர் மாவட்டத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகிகளின், வாரிசுகள் கவுரவிக்கப்-பட்டனர்.எஸ்.பி., ஜோஷ் தங்கையா, டி.ஆர்.ஓ.,க்கள் விமல்ராஜ், பாலசுப்பிரமணி (நிலம் எடுப்பு), சப்--கலெக்டர் சுவாதி ஸ்ரீ, திட்ட இயக்குனர் வீரபத்-திரன், ஆர்.டி.ஓ., முகமது பைசல் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் பலர் குடியரசு தின விழாவில் பங்கேற்றனர். தொடர்ந்து பள்ளி மாணவ, மாண-வியர் பங்கேற்ற, கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

* கரூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், குடியரசு தின விழா நடந்தது. அதில், மாவட்ட தலைமை நீதிபதி இளவழகன், தேசிய கொடியை ஏற்றி வைத்தார். விழாவில், மகளிர் விரைவு நீதி-மன்ற நீதிபதி தங்கவேல், தலைமை குற்ற-வியல் நீதிபதி ஜெயப்பிரகாஷ், உரிமையியல் நீதிமன்ற நீதிபதி தாரணி, வக்கீல்கள் சக்திவேல், பானுமதி உள்பட பலர் பங்கேற்றனர்.

* கரூர் மாவட்ட மைய நுாலகத்தில், மாவட்ட நுாலக அலுவலர் சிவக்குமார், தேசிய கொடியை ஏற்றி வைத்தார். விழாவில், துாய்மை பணியா-ளர்கள் கவுரவிக்கப்பட்டனர். அப்போது, மூன்றாம் நிலை நுாலகர் ஜெஸிந்தா மேரி, ஊர்ப்புற நூலகர் கோகிலா, தட்டச்சர் பாப்பம்மாள் உள்பட பலர் பங்கேற்றனர்.

* கரூர் மாவட்ட சுதந்திர போராட்ட வீரர்கள், வாரிசு

தாரர்கள் சங்கம் சார்பில்,

தேசத்தந்தை காந்தியடிகள்

உள்பட, பல்வேறு தலைவர் சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிர்வாகிகள் ராதா கிருஷ்ணன், ராஜேந்திரன், ஓம் சக்தி சேகர், சின்-னசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

* கரூர் பரணி பார்க் கல்வி நிறுவனத்தில், குடிய-ரசு தின விழா நடந்தது. அதில், கல்வி குழும தாளாளர் மோகனரங்கன் தேசிய கொடி ஏற்றி வைத்தார். பள்ளி செயலாளர் பத்மாவதி, அறங்-காவலர் சுபாஷினி, முதன்மை முதல்வர் ராமசுப்-பிரமணியம் உள்பட பலர் பங்கேற்றனர்.

* லாலாப்பேட்டை, மகாத்மா காந்தி சிலைக்கு, காங்., சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாநில

ஓ.பி.சி., அணி செயலாளர் தட்சணமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் கலந்து

கொண்டனர்.

* கரூர் மாவட்ட பா.ஜ., இளைஞர் அணி மாவட்ட தலைவர் மெடிக்கல் பெருமாள் தலைமையில், காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிர்-வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

* பள்ளப்பட்டி நகராட்சி அலுவலக வளாகத்தில், நகராட்சி தலைவர் முனவர் ஜான் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். அரவக்குறிச்சி பேரூ-ராட்சி அலுவலகத்தில் தலைவர் ஜெயந்தி தேசிய கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார். அரவக்குறிச்சி நீதிமன்ற வளாகத்தில், நீதிபதி எஸ்தர்லீன் தேசிய கொடி ஏற்றினார்.






      Dinamalar
      Follow us