/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாவட்டத்தில் குடியரசு தின விழா கோலாகலம்
/
மாவட்டத்தில் குடியரசு தின விழா கோலாகலம்
ADDED : ஜன 27, 2025 03:00 AM
கரூர்: கரூர் மாவட்டத்தில், குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்-டாடப்பட்டது.
கரூரில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில், குடியரசு தின விழா நடந்தது. இதில், கலெக்டர் தங்கவேல், தேசியக்கொ-டியை ஏற்றி வைத்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம், 3 பயனாளி-களுக்கும்; வருவாய்த்துறை சார்பில், 2 பயனாளிகளுக்கு, பட்-டாவும்; தோட்டக்கலைத்துறை சார்பில், கூட்டுறவுத்துறை சார்பில் பயிர் கடன், செம்மறி ஆடு பராமரிப்பு கடனுதவி திட்-டத்தின் கீழ், 5 பயனாளிகளுக்கு, 3.33 லட்சம் ரூபாய்- மதிப்பில் கடனுதவி என, மொத்தம், 30 பயனாளிகளுக்கு, 64.39 லட்சம் ரூபாயில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின், அரசு இசைப்பள்ளி மாணவ, மாணவியரின் வரவேற்பு நட-னமும், வாங்கல் அரசு மேல்நிலைப்பள்ளி, காந்திகிராமம் புனித தெரசா மகளிர் மேல்நிலைப்பள்ளி, மலர் மெட்ரிக் மேல்நிலைப்-பள்ளி ஆகிய பள்ளிகளின் மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சி-களும் நடந்தன.கரூர் எஸ்.பி., ரோஸ்கான்அப்துல்லா, டி.ஆர்.ஓ., கண்ணன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்செல்வன், கரூர் ஆர்.டி.ஓ., முகமது பைசல், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை டீன் லோகநாயகி, வேளாண் இணை இயக்குனர் சிவானந்தம் உள்பட பலர் பங்கேற்றனர்.
* கரூர் மாவட்ட நீதிமன்றத்தில், மாவட்ட நீதிபதி சண்முகசுந்-தரம், தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். விழாவில் நீதிபதிகள் தங்கவேல், ஜெயப்பிரகாஷ், தாரணி உள்பட பலர் பங்கேற்றனர்.
* கரூர் தன்தோன்றிமலை கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமி கோவிலில், கோவில் கண்காணிப்பாளர் பிரவீனா
தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.

