வீரியபாளையத்தில் கிரானைட் குவாரி அனுமதிப்பது குறித்து கருத்து கேட்பு
வீரியபாளையத்தில் கிரானைட் குவாரி அனுமதிப்பது குறித்து கருத்து கேட்பு
ADDED : பிப் 25, 2026 07:03 AM
கிருஷ்ணராயபுரம்: கிரானைட் குவாரி குறித்த மக்கள் கருத்து கேட்பு கூட்டம், லட்சுமணம்பட்டியில் நடந்தது.
கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் விமல்ராஜ் தலைமை வகித்தார். கிருஷ்ணராயபுரம் அடுத்த வீரியபாளையம் கிராமத்தில், ராணி நிறுவனத்தின் பல வண்ண கிரானைட் குவாரி அமைப்பதற்கான மக்கள் கருத்து கேட்பு கூட்டம் லட்சுமணம்பட்டியில் நேற்று நடந்தது. கூட்டத்தில், குவாரிக்கு சொந்தமான பகுதியில் ஆதி திராவிடர் வசிக்கும் இடமாக இருப்பதால் மக்களுக்கு பல வகையான இடையூறு ஏற்படும் அபாயம் உள்ளதாக, கருத்து கேட்பு கூட்டத்தில் கூறப்பட்டது. மக்கள் கூறிய கருத்துகளை பதிவு செய்து, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சமூக ஆர்வலர் கரூர் முகிலன், வி.சி., கட்சி மாவட்ட செய்தி தொடர்பாளர் மகாமுனி என்ற வன்னியரசு மற்றும் லட்சுமணம்பட்டி, வீரியபாளையம் கிராம மக்கள் மற்றும் கரூர் மாசுகட்டுப்பாடு வாரிய நிர்வாக அலுவலர்கள், கிருஷ்ணராயபுரம் தாலுகா வருவாய்த்துறை அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
