ADDED : செப் 05, 2026 06:17 AM
அ நிறம் | அளவு
குளித்தலை:குளித்தலை
அடுத்த மருதுார் டவுன் பஞ்., பகுதியில், ராணி மங்கம்மாள் சாலையில் உள்ள
விவசாய நிலங்கள் மற்றும் மேட்டுமருதுார் மேல வயல் பரளி ஆர்.பி. களம்
பகுதியில் உள்ள, பாசன கண்ணாறு வடிகால் கண்ணாறுகளை, குளித்தலை வேளாண்
பொறியியல் துறை மூலம் பொக்லைன் இயந்திர உதவியுடன் துார்வாரி
கொடுத்தனர்..
இதேபோல், மேட்டுமருதுார் கீழ வயல் பகுதியில் உள்ள
பாசன கண்ணாறு வடிகால் கண்ணாறுகளை, குளித்தலை வேளாண் பொறியியல் துறை
சார்பில் துார்ர்வாரி உதவிட வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
