ADDED : மே 21, 2026 06:01 AM
அ நிறம் | அளவு
கரூர்:கரூர், திருக்காம்புலியூர் ரவுண்டானா, கரூர்-கோவை, ஈரோடு பிரிவு சாலை வழியாக தினமும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இங்குள்ள, முனியப்பன் கோவில் பகுதி அருகே அடிக்கடி விபத்து நடக்கிறது.
இந்த இடத்தில் போக்குவரத்து போலீசார் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். மேலும், கோவில் அருகே ரவுண்டானாவும் அமைக்க வேண்டும். பொதுமக்களின் அவதியை கருத்தில் கொண்டு, உடனடியாக இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும். கரூர் திண்ணப்பா கார்னர், சர்ச் கார்னர், திருச்சி சாலையில் தெரசா பள்ளி ஆகிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் காரணமாக விபத்து அதிகம் நடக்கிறது. போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே, இங்கு போக்குவரத்து போலீசார் கண்காணிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
