/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தான்தோன்றிமலையில் கால்வாய் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை
/
தான்தோன்றிமலையில் கால்வாய் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை
தான்தோன்றிமலையில் கால்வாய் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை
தான்தோன்றிமலையில் கால்வாய் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை
ADDED : அக் 28, 2025 01:27 AM
கரூர், தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் சுற்றியுள்ள கணபதிபாளையம், அன்பு நகர், காமராஜ் நகர் உள்ளிட்ட
பகுதிகளை சேர்ந்த குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் மழைநீர், வடிகால் கால்வாய் மூலம் அமராவதி ஆற்றில் கலக்கிறது.இப்பகுதியில் கால்வாய்
குறுகியதாகவும், ஆழம் இல்லாமலும் இருப்பதால் மழை நேரத்தில் கழிவுநீருடன் கலந்து சாலைகளில் தேங்கி நின்றது.
இதனால் மழை நீரில் செல்ல முடியாமல் வாகன ஓட்டுனர்கள் தவித்தனர்.
கால்வாயை அகலப்படுத்தியும், ஆழப்படுத்தியும் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து கால்வாய் அகலப்படுத்தி, ஆழப்படுத்தும் பணிகள் கடந்த இரு வாரங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. தற்போது, 90 சதவீத பணிகள் முடிந்தும் இன்னும் கழிவுநீர் கால்வாய் பயன்பாட்டுக்கு வரவில்லை.
இப்பகுதி மக்கள், வேறு வழியாக சுற்றி செல்ல வேண்டி நிலை உள்ளது. இப்பணிகளை போர்க்கால அடிப்படையில் முடிக்க வேண்டும்.