விசைத்தறி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்க வேண்டுகோள்
விசைத்தறி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்க வேண்டுகோள்
ADDED : ஜூன் 16, 2026 03:33 AM
பள்ளிப்பாளையம்; 'தொழிலாளர்களுக்கு, 75 சதவீதம் கூலி உயர்வு வழங்க வேண்டும்' என, விசைத்தறி தொழி-லாளர் சங்கத்தினர், 21வது மகாசபை கூட்டத்தில் வலியுறுத்தினர்.
நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்க, பள்ளிப்பாளையம் ஒன்றியக்குழுவின், -21வது மகாசபை கூட்டம், நேற்று முன்தினம், காவிரி பகுதியில் உள்ள தொழிற்சங்க அலுவல-கத்தில் நடந்தது. சங்க தலைவர் முத்துக்குமார் தலைமை வகித்தார்.
கூட்டத்தில், விசைத்தறி தொழிலாளர்களுக்கு, 75 சதவீதம் கூலி உயர்வு வழங்க வேண்டும் எனக்கேட்டு, விசைத்தறி உரிமையாளர் சங்கத்-துக்கு கடிதம் அனுப்பி, நான்கு மாதமாகியும் தீர்வு காணவில்லை.
இதை கண்டித்து, கையெழுத்து இயக்கமும், அடுத்த மாதம், 14ல் பள்ளிப்பாளையத்தில் ஆர்ப்-பாட்டமும் நடத்தப்படும். போதிய வருமான-மின்றி கடன் நெருக்கடியால், கிட்னியை விற்று உடல்நலம் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு, மாதம், 5,000 ரூபாய் உதவித்தொகை, மருத்துவ உதவி, வீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.வீடு இல்லாத விசைத்தறி தொழிலாளர்களுக்கு, ஆயக்காட்டூர் பகுதியில் கட்டப்படும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு திட்ட குடியிருப்பில், முன்-னுரிமை அடிப்படையில் வீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்-பட்டன.
மாவட்ட செயலாளர் அசோகன், மாவட்ட தலைவர் மோகன், ஒன்றியக்குழு செயலாளர் குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
