/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஜவஹர் பஜாரில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டுகோள்
/
ஜவஹர் பஜாரில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டுகோள்
ஜவஹர் பஜாரில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டுகோள்
ஜவஹர் பஜாரில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டுகோள்
ADDED : அக் 13, 2024 08:47 AM
கரூர்: கரூர் ஜவஹர் பஜாரில், தீபாவளி பண்டிகையையொட்டி, கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டும் என, பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
நாடு முழுவதும் வரும், 31ல் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, கரூர் ஜவஹர் பஜார், கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் பகுதி, கரூர் எம்.எல்.ஏ., அலுவலக சாலை உள்ளிட்ட
பகுதிகளில், 300க்கும் மேற்பட்ட தற்காலிக தரைக்கடைகள் அமைக்கப்பட உள்ளது. மேலும், ஜவஹர்
பஜார் பகுதியில் ஜவுளி கடைகள், நகை கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் உள்ளதால்,
ஆயிரக்கணக்கானோர் புத்தாடை மற்றும் பல்வேறு பொருட்களை வாங்க வருவர்.இதனால், ஜவஹர் பஜாரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. அதை பயன்படுத்தி கொண்டு,
சமூக விரோதிகள் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவர். இதனால், கரூர் ஜவஹர் பஜார் பகுதியில்,
தீபாவளி பண்டிகை முடியும் வரை, கனரக வானங்கள் செல்ல, டவுன் போக்குவரத்து போலீசார்
நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.