தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கோடை மழை துவங்கும் முன் சாக்கடையை துார்வார கோரிக்கை

கோடை மழை துவங்கும் முன் சாக்கடையை துார்வார கோரிக்கை

கோடை மழை துவங்கும் முன் சாக்கடையை துார்வார கோரிக்கை


ADDED : மார் 09, 2026 06:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 09, 2026 06:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்; சில மாதங்களுக்கு முன், வடகிழக்கு பருவ-மழை பெய்தபோது, கரூர் நகர பகுதிகளான கோவை சாலை, ஜவஹர் பஜார், தின்னப்பா கார்-னரில் தண்ணீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடி-யது.

இதனால், பொதுமக்கள் சாலைகளில், கார், இருசக்கர வாகனங்களில் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், கரூர் நகரில் கடந்த சில நாட்களாக கோடை காலத்தை-யொட்டி, வெயில் சுட்டெரித்து வருகிறது. தமிழ-கத்தில் பல மாவட்டங்களில், கோடை மழை பெய்யும் என, சென்னை வானிலை மையம் தெரி-வித்துள்ளது.கரூர் நகரில் அதிகளவில் மழை பெய்யும்போது, சாலைகளில் தேங்கும் அபாயம் உள்ளது. இதனால், கரூர் நகரில் உள்ள சாக்கடை கால்-வாய்களை துார்வார வேண்டும் என பொதுமக்கள் எதிர் பார்க்கின்றனர்.

இதுகுறித்து, பொதுமக்கள் கூறியதாவது:

கரூர் மாநகராட்சி பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய்களை சுத்தம் செய்து, பல மாதங்கள் வரை ஆகிறது. மண், பிளாஸ்டிக் பொருட்களால், அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழி-யில்லை. கரூர் மாவட்டத்தில், கோடை மழை பெய்தால், தண்ணீர் தேங்குவதை தடுக்க, கரூர் மாநகராட்சி பகுதியில் உள்ள சாக்கடை கால்-வாய்களை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us