/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மழை நீரில் மூழ்கிய தரைப்பாலம் உயர்மட்ட பாலம் கட்ட கோரிக்கை
/
மழை நீரில் மூழ்கிய தரைப்பாலம் உயர்மட்ட பாலம் கட்ட கோரிக்கை
மழை நீரில் மூழ்கிய தரைப்பாலம் உயர்மட்ட பாலம் கட்ட கோரிக்கை
மழை நீரில் மூழ்கிய தரைப்பாலம் உயர்மட்ட பாலம் கட்ட கோரிக்கை
ADDED : நவ 10, 2024 03:11 AM
கரூர்: கரூர் அருகே, பல ஆண்டுகளாக தரைப்பாலம் தரம் உயர்த்தப்ப-டாததால், மழை காலங்களில் வாகன ஓட்டிகள், விபத்தில் சிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம்-சேங்கல் சாலையின் குறுக்கே வெண்ணிலை என்ற இடத்தில், கழிவுநீர் ஓடை இடையே, பல ஆண்டுகளுக்கு முன்பு தரைப்பாலம் கட்டப்பட்-டது. அதன் வழியாக, நாள்தோறும் நுாற்றுக்கணக்கான வாக-னங்கள் சென்று வருகின்றன.இந்நிலையில், சமீபத்தில் பெய்த மழையின் போது கழிவுநீர் ஓடையில், அதிகப்படியான தண்ணீர் சென்றதால், தரைப்பா-லத்தை மூழ்கிய நிலையில் ஓடியது. அப்போது, அந்த வழியாக வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல், அவதிப்பட்டனர். பல நாட்-களாக, தரைப்பாலத்தில் தண்ணீர் சென்றதால், சாலையில் பாசானம் பிடித்துள்ளது.
இதனால், இரவு நேரத்தில் உப்பிடமங்கலம்-சேங்கல் சாலையில் செல்லும், இரு சக்கர வாகன ஓட்டிகள் தவறி விழுந்து படுகாயம் அடைந்துள்ளனர். எனவே, உப்பிடமங்கலம்--சேங்கல் இடையே, வெண்ணிலை என்ற இடத்தில் உள்ள, தரைப்பாலத்தை தரம் உயர்த்தி, உயர்மட்ட பாலம் கட்ட நடவ-டிக்கை எடுக்க, கரூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.