ADDED : மார் 28, 2026 04:50 AM
அரவக்குறிச்சி; கால்நடைகளுக்கு ஏற்படும் நோயை தடுக்க, தடுப்பூசி முகாம் நடத்த வேண்டும் என, விவசா-யிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரவக்குறிச்சி ஒன்றியதில் பசு, எருமைகள் வளர்ப்பவர்களின் நலன் கருதியும், அவைகளை தாக்கும் புரூசெல்லோசிஸ் நோய் தடுப்பூசி முகாம் நடத்த வேண்டும் என்றும், கால்நடை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அர-வக்குறிச்சி ஒன்றியத்தில், விவசாயத்திற்கு துணை தொழிலாக கால்நடைகளை வளர்த்து, தங்கள் வாழ்வாதரத்தை மேம்படுத்தி வருகின்-றனர். இந்நிலையில், புரூசெல்லோசிஸ் நோய் தாக்குதல் உள்ளதாக விவசாயிகள் கூறுகின்-றனர்.புரூசெல்லோசிஸ் என்பது பசு, எருமைகளுக்கு கருச்சிதைவு மற்றும் மலட்டு தன்மை ஏற்ப-டுத்தும் நோயாகும். இது புரூ செல்லா அபார்டஸ் என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு தீவிர காய்ச்-சலும், சினை ஈன்றும் தருவாயில், 5 முதல் 8 மாத கால கர்ப்பப காலத்தில் கருச்சிதைவும் ஏற்-படுகிறது. மேலும், இந்நோயினால் நஞ்சுக்கொடி தங்குதல், மீண்டும் எளிதில் சினை பிடிக்காமை, பால் உற்பத்தி குறைவு போன்றவை ஏற்படுகிறது.
தேசிய கால்நடைநோய் தடுப்பு திட்டத்தின் கீழ், முதன் முறையாக புரூசெல்லோசிஸ் எனப்படும் கருச்சிதைவு நோய்க்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசியை ஒருமுறை செலுத்தி கொண்டால் அந்த கிடேரி கன்றுகளுக்கு அதன் ஆயுள் முழுவதற்குமான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். இந்த தடுப்பூசி திட்டம், ஒவ்-வொரு 4 மாதங்களுக்கு ஒருமுறை 4 முதல் 8 மாதம் வயதுடைய கிடேரி கன்றுகளுக்கு செலுத்-தப்படுகிறது.
எனவே, அரவக்குறிச்சி ஒன்றியத்தில் பசு, எரு-மைகளை தாக்கும் புரூசெல்லோசிஸ் நோய் தடுப்பூசி முகாம் நடத்த வேண்டும் என, கால்-நடை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
