/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாலை நேரங்களில் போக்குவரத்து போலீசார் கண்காணிக்க கோரிக்கை
/
மாலை நேரங்களில் போக்குவரத்து போலீசார் கண்காணிக்க கோரிக்கை
மாலை நேரங்களில் போக்குவரத்து போலீசார் கண்காணிக்க கோரிக்கை
மாலை நேரங்களில் போக்குவரத்து போலீசார் கண்காணிக்க கோரிக்கை
ADDED : செப் 20, 2024 01:40 AM
மாலை நேரங்களில் போக்குவரத்து
போலீசார் கண்காணிக்க கோரிக்கை
கரூர், செப். 20-
சின்னதாராபுரம், கடை வீதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, போக்குவரத்து போலீசார் கண்காணிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம், சின்னதாராபுரம் பஸ் ஸ்டாண்ட் செல்லும் கரூர், தாராபுரம் சாலையில் பாரத ஸ்டேட் வங்கி, போலீஸ் ஸ்டேஷன் மற்றும் பல்வேறு வர்த்தக நிறுவன கடைகள் செயல்பட்டு வருகின்றன.
தினமும் ஏராளமான வாடிக்கையாளர்கள் இரு, நான்கு சக்கரவாகனங்களில் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் வாடிக்கையாளர்களுக்கு, வாகனங்களை நிறுத்த போதுமான பார்க்கிங் வசதி இல்லாததால், சாலை நடுவே நிறுத்திவிட்டு செல்கின்றனர்.
இதனால், இவ்வழியாக செல்லும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொள்கின்றன. எனவே மாலை நேரத்திலாவது, போக்குவரத்து போலீசாரை பணியில் அமர்த்தி கண்காணிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.