ADDED : டிச 08, 2024 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கல்லடை குளத்தை துார்வார கோரிக்கை
குளித்தலை, டிச. 8-
குளித்தலை அடுத்த கல்லடை பஞ்., கல்லடையில், 184 ஏக்கர் பரப்பளவில் குளம் உள்ளது. இந்த குளம், கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன் துார்வாரப்பட்டது. தற்போது குப்பை கூலங்கள் நிரம்பி காணப்படுகிறது. இதனால், நேற்று முன்தினம் பெய்த கன
மழையால் குளம் நிரம்பி, உபரி நீர் வீணாக வெளியேறி வருகிறது. இந்த குளத்தை முறையாக துார்வாரி இருந்தால், தண்ணீரை சேமித்து வைத்து விவசாயத்திற்கு பயன்படுத்தி இருக்கலாம். மேலும், நிலத்தடி நீர்மட்டம் உயரவும் பேருதவியாக இருந்திருக்கும். தற்போது
உபரிநீர் வீணாகி வருகிறது. எனவே, கல்லடை குளத்தை துார்வார, பஞ்., நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.