வாங்கல் - மோகனுார் வழியாக கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை
வாங்கல் - மோகனுார் வழியாக கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை
ADDED : டிச 09, 2024 07:03 AM
அ நிறம் | அளவு
கரூர்: வாங்கல் - மோகனுார் வழிதடத்தில் கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் மாவட்ட எல்லையில் வாங்கல் காவிரியாற்றுக்கு அக்கறையில், நாமக்கல் மாவட்டம், மோகனுார் உள்ளது. இங்கிருந்து வேலைக்காக தினமும் நுாற்றுக்கணக்கானோர் கரூர் வந்து செல்கின்றனர். இங்கு, வாங்கல் - மோகனுார் மேம்பாலம் கட்டப்பட்டு பல ஆண்டுகளாகியும் அரசு பஸ்கள் குறைந்தளவில் இயக்கப்பட்டு வருகின்றன.
காலை, மாலை நேரங்களில் போதுமான பஸ் இயக்கப்படாததால், பயணிகள் திண்டாடி வருகின்றனர். பலர் பஸ் கிடைக்காமல் நாமக்கல் வந்து செல்வதால் குறித்த நேரத்திற்கு வந்து செல்ல முடியவில்லை. எனவே, வேலைக்கு சென்று வருவோரின் வசதிக்காக, இந்த வழிதடத்தில் கூடுதல் பஸ்களை நேரடியாக இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
