ADDED : மே 23, 2026 05:55 AM
அ நிறம் | அளவு
குளித்தலை :இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிருஷ்ணராயபுரம் ஒன்றிய குழு உறுப்பினர் மாணிக்கம், கலெக்டர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளருக்கு, அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
குளித்தலை - மணப்பாறை மாநில நெடுஞ்சாலையில், ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளில் வெள்ளை நிற பெயின்ட் மற்றும் இரவு நேரத்தில் ஒளிரும் எச்சரிக்கை மின் விளக்குகள் இல்லாததால், அடிக்கடி சாலை விபத்துகள் நடந்து வருகிறது. விபத்துக்களை தடுக்கவும், எளிதில் தெரிந்து கொள்ளும் வகையிலும், வேகத்தடைகளில் வெள்ளை நிற பெயின்ட் அடிக்கவும் மற்றும் இரவு நேரத்தில் ஒளிரும் எச்சரிக்கை மின் விளக்குகள் அமைக்க வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளார்.
