சாக்கடை கழிவுநீர் வாய்க்கால் வசதியை செய்து தர கோரிக்கை
சாக்கடை கழிவுநீர் வாய்க்கால் வசதியை செய்து தர கோரிக்கை
ADDED : ஜூன் 17, 2026 05:46 AM
கரூர்:கரூர் அருகே, சாக்கடை கழிவு நீர் வாய்க்கால் வசதியை செய்து தர வேண்டும் என, பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கரூர்
மாவட்டம், பெரிய ஆண்டாங்கோவில் அக்ரஹாரம் பகுதியில், 50க்கும்
மேற்பட்ட வீடுகள் உள்ளன. அந்த பகுதியில் புதிதாக தார் சாலை
போடப்பட்டுள்ளது. ஆனால், போதிய சாக்கடை கழிவு
நீர் வாய்க்கால்
இல்லாததால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் ஓடிய
வண்ணம் உள்ளது. மேலும், அமராவதி ஆற்றின் கரையோர பகுதி
களில்
இருந்து, சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள, போர்வெல் குழாய்களில்
இருந்து, தண்ணீர் லாரிகளில் ஏற்றப்பட்டு, அக்ரஹாரம் வழியாக கொண்டு
செல்லப்படுகிறது. இதனால், சாலைகளும் சேதமடைந்துள்ளது. ஒரு சில
இடங்களில் மட்டும், சாக்கடை கழிவுநீர் வாய்க்கால் கட்டப்பட்டுள்ளது.
எனவே,
பெரிய ஆண்டாங்கோவில் அக்ரஹாரம் பகுதியில் முழுவதுமாக, புதிதாக
சாக்கடை கழிவு நீர் வாய்க்கால்களை கட்டி தர, ஆண்டாங்கோவில் மேற்கு
பஞ்., மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
